உலகளவில் சிவில் விமான போக்குவரத்துத்துறையில் இந்தியாவில்தான் பெண் விமானிகள் அதிகம் இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிவில் விமான போக்குவரத்துத்துறையில் இந்தியாவில் தான் பெண் விமானிகள் அதிகம் இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சிவில் விமான போக்குவரத்துத்துறையில் உள்ள மொத்த விமானிகளில் 12.4 சதவீதம் பேர் பெண்கள். உலக சராசரியைவிட இது 3 மடங்கு அதிகம் ஆகும்.
இந்தியாவுக்கு அடுத்ததாக அயர்லாந்தில் 9.9, தென் ஆப்பிரிக்காவில் 9.8, ஆஸ்திரேலியா 7.5, கனடா 7, ஜெர்மனி 6.9, அமெரிக்கா 5.5, இங்கிலாந்து 4.7, நியூசிலாந்து மற்றும் ஹாங்காங் நாடுகளில் தலா 4.5 சதவீதம் பெண்கள் சிவில் விமான போக்குவரத்துத்துறையில் விமானிகளாக உள்ளனர்.
கடந்த 20-25 ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் பெண் விமானிகள் அதிகம் இருப்பது என்பது நம் நாடு பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகவுள்ளது.