காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் டவுனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 146 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட உத்திரமேரூர் டவுனில் உள்ள கீதா கூல்டிரிங்ஸ் கடையில் ரகசியமாகக் குட்கா விற்பனை செய்வதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த கடையில் உத்திரமேரூர் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது சுமார் 146.5 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களைக் கடையில் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூபாய்.19,588 ஆகும்.
அங்கிருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் குட்கா பதுக்கி வைத்திருந்த சதீஷ் (38) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.