இந்தியாவில் நடைபெறுவரும் ரஞ்சி கோப்பைஅரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. இன்று இரண்டு அரையிறுதி போட்டிகள் நடைபெறுகிறது. அதில் தமிழ் நாடு மற்றும் மும்பை அணிகள் விளையாடுகிறது.
இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
தமிழ்நாடு அணி:
என். ஜெகதீசன், சாய் சுதர்சன், பாபா இந்திரஜித் , பிரதோஷ் , விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர்(கேப்டன்), எம்.முகமது, எஸ்.அஜித் ராம், சந்தீப் வாரியர், குல்தீப் சென்.
மும்பை அணி :
பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ்அய்யர், பூபன் லால்வானி, அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), முஷீர் கான், ஷம்ஸ் முலானி, ஹர்திக் தாமோர், ஷர்துல் தாக்கூர், தனுஷ் கோடியான், மோகித் அவஸ்தி, துஷார் தேஷ்பாண்டே
அதேபோல் இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேஷ் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த விளையாடி வருகிறது.