தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து : பல லட்சம் பொருட்கள் சேதம்!
Sep 10, 2026, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து : பல லட்சம் பொருட்கள் சேதம்!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 12:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடி கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து சேதமானது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இரு நபர்கள் தோணுகாலில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலை ஒன்றைக் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலையில், பணியாளர்கள் நேற்று வழக்கம் போல, தனது பணிகளை முடித்துவிட்டு வீடுகளுக்குச் சென்ற நிலையில், இரவில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் ஆலையில் இருந்துள்ளனர்.

அப்போது, ஆலையில் உள்ள இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்துப் பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறி, தீயணைப்பு படை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தகவல் அறிந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தர் ராஜ் தலைமையிலான தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் தீ தொடர்ந்து எரிந்ததால், தீயை அணைப்பதற்கு டிராக்டர் மூலமும் தண்ணீர் கொண்டு வந்து தீயணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இதில் தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஆனால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.

இதையடுத்து, சம்பவ இடத்தை கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணப்பெருமாள், வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் இரவில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Fire accident in the matchbox factory: lakhs of goods damaged!
Share
Tweet
SendShare
Previous Post

ரஞ்சி கோப்பை அரையிறுதி : தமிழகம் பேட்டிங்!

Next Post

சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறிய கர்நாடக அரசு : உடனடியாக பதவி விலக பாஜக வலியுறுத்தல்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies