ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தத்தை கொண்டு வருவதே பிரதமர் மோடியின் நோக்கம் எனப் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 1,100 அன்னபூர்ணா கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் இ-போஸ் இயந்திரங்களுடன் இணைக்கப்பட்ட E-Weighing scale மூலம் உணவு தானியங்கள் விநியோகத்தை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்,
“ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தத்தை கொண்டு வருவதே பிரதமரின் நோக்கம். இதன் காரணமாக, மாநிலத்தின் 8000 ரேஷன் கடைகளால் 15 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர், பசிப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
நேரடி விநியோகத்தின் மூலம் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களை FCI-யில் (FCI- Food Corporation of India) இருந்து கண்காணிக்க முடியும். நாம் காணும் இந்த மாற்றம் ‘சப்கா சத் சப்கா விகாஸ்’, என்று பிரதமர் மோடி கொடுத்த மந்திரம்… நல்லாட்சி என்பது வெறும் வார்த்தையல்ல, எந்த பாகுபாடும் இல்லாமல் அரசு திட்டங்களின் பலன்களை மக்கள் பெறும் முன்மாதிரி இது. இந்த மாதிரியின் நல்லாட்சி ராம ராஜ்யம் என்று அழைக்கப்படுகிறது.