அசாமில் உள்ள ஐசிஏஆர் – இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொடக்க விழாவில், தலைமை விருந்தினராக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா பங்கேற்க உள்ளார்.
அசாமில் உள்ள ஐசிஏஆர் – இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது. இதில், தலைமை விருந்தினராக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இது வேளாண்மையின் கடமைகள் மற்றும் நோக்கங்களுடன், முறையான ஆராய்ச்சி, கற்பித்தல் விரிவாக்கம் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் முன்னேற்றத்தை நோக்கிய ஒரு மைல்கல் முயற்சியாக இருக்கும்.
தென்கிழக்கு ஆசியாவில் வேளாண் கல்வியில் உயர்கல்வி நிறுவனமாக செயல்படுவது, வடகிழக்கு இந்தியாவின் உயர் மதிப்பு உயிரியல் வளங்களைப் பாதுகாத்து பயன்படுத்துதல் மற்றும் சிறப்புப் பண்புகளைக் கொண்ட பயிர் மற்றும் தாவர மரபணு வகைகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகளில் புதிய வேளாண் ஆராய்ச்சி மையம் ஈடுபடும்.
மேலும், வடகிழக்கு இந்தியாவின் அமில மண் பகுதிகளில் அமில மண்ணை நிர்வகித்தல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல், கரிம வேளாண்மையை மேம்படுத்த பெரிய பயிர் சாகுபடி முறைகளுக்கான இயற்கை வேளாண் தொகுதியை உருவாக்குதலிலும் கவனம் செலுத்தப்படும்.
உள்நாட்டு மீன் மற்றும் விலங்கு வளங்களுக்கான உற்பத்தி தொழில்நுட்பத்தை விருத்தி செய்தல், கிராமப்புற தொழில் முயற்சியை ஊக்குவித்தல் மற்றும் வேளாண்மையை அதிக இலாபகரமானதாகவும், நிலையானதாகவும் ஆக்குவதற்காக வணிகமயமாக்குதல் ஆகியவற்றிலும் புதிய வேளாண் ஆராய்ச்சி மையம் துணைபுரியும்.