தொடரும் கொலைகள் : அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொலை!
Jul 26, 2025, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடரும் கொலைகள் : அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொலை!

Web Desk by Web Desk
Mar 2, 2024, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் தொடர்ந்து இந்திய மாணவர்கள் மர்ம முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ் என்ற நடனக் கலைஞர், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அமர்நாத் கோஷ். இவர் ஒரு சிறந்த பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடி நடனக் கலைஞர் ஆவார்.

சென்னையில் உள்ள கலாஷேத்ரா அகாடமியின் முன்னாள் மாணவரான இவர், டெல்லியில் உள்ள சர்வதேச கலாச்சார அமைச்சகத்திடம் இருந்து குச்சிப்புடிக்கான தேசிய உதவித் தொகையையும் பெற்றுள்ளார்.

மேலும், புகழ்பெற்ற நடனக் கலைஞர்களான போபிதா டே சர்க்கார், ஸ்ரீ எம்.வி.நரசிம்மாச்சாரி, பத்மஸ்ரீ அடையார் கே.லக்‌ஷ்மண் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர்.

இவருடைய பெற்றோர் இறந்துவிட்டனர். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நகரில் MFA படித்து வந்தார்.

அங்கு அவர், படித்து வந்த கல்வி நிலையம் அருகே நடைபயிற்சியில் (evening walk) ஈடுபட்டு இருந்தபோது, மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதனை அவரது நண்பரும், தொலைக்காட்சி நடிகையுமான தேவலீனா பட்டாச்சார்ஜி, சிக்காகோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனையடுத்து, இந்திய தூதரகம் வெளியிட்ட தகவலில், “அமர்நாத் கோஷ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.

போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்களின் அறிக்கையை கவனித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளது. மேலும், “அமர்நாத் கோஷின் உறவினர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.

இந்தச் சம்பவத்தை போலீஸார் மற்றும் கல்வி நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடப்பு ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஐந்து இந்திய மாணவர்கள் வெவ்வேறு சம்பவங்களில் இறந்ததாகக் கூறப்படுகிறது.

Tags: Continued murders: Indian dancer shot dead in America!
ShareTweetSendShare
Previous Post

அமித் ஷா முன்னிலையில் திரிப்ரா மோத்தா அமைப்புக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

Next Post

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies