அமித் ஷா முன்னிலையில் திரிப்ரா மோத்தா அமைப்புக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமித் ஷா முன்னிலையில் திரிப்ரா மோத்தா அமைப்புக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 06:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்று திரிபுராவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் – வடகிழக்குப் பகுதியில் அமைதியையும் வளத்தையும் ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளில் 11 முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது  என மத்திய உள்துறை  அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், மத்திய அரசு, திரிபுரா அரசு மற்றும் திரிப்ரா மோத்தா அமைப்புக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

புதுதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், மத்திய அரசு, திரிபுரா அரசு மற்றும் திரிப்ரா மோத்தா என்று பிரபலமாக அழைக்கப்படும் உள்நாட்டு முற்போக்கு பிராந்திய கூட்டணி மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினரிடையே முத்தரப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், திரிபுராவின் பழங்குடி மக்களின் வரலாறு, நிலம் மற்றும் அரசியல் உரிமைகள், பொருளாதார வளர்ச்சி, அடையாளம், கலாச்சாரம் மற்றும் மொழி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்க்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன், நல்ல தீர்வை உறுதி செய்வதற்காக, ஒரு கூட்டுப் பணிக்குழுவை அமைக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமித் ஷா,

திரிபுராவுக்கு இன்று ஒரு வரலாற்று நாள் என்று கூறினார். வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது என்றும் ஆனால் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான கனவை நனவாக்குவதில், திரிபுரா தனது பங்களிப்பை வழங்க உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், வன்முறையற்ற வடகிழக்கு என்ற தொலைநோக்குப் பார்வைக்கு வடிவம் கொடுக்க உள்துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக  குறிப்பிட்டார்.  பிரதமர் நரேந்திர மோடி அரசின் பல்வேறு ஒப்பந்தங்கள் காரணமாக, சுமார் 10,000 பேர் ஆயுதங்களைத் துறந்து பொது நீரோட்டத்தில் இணைந்துள்ளனர் என்றும், இதன் விளைவாக வளர்ச்சிக்கான சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்குப் பகுதியில் எல்லைகள், அடையாளம், மொழி மற்றும் கலாச்சாரம் தொடர்பான 11 வெவ்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு பணியாற்றியுள்ளது என்று அவர் கூறினார்.

இன்றைய ஒப்பந்தத்தின் மூலம், திரிபுரா சர்ச்சைகள் இல்லாத திரிபுராவாக மாறும் என்று அமித் ஷா தெரிவித்தார். இப்போது உரிமைகளுக்காக போராட வேண்டியதில்லை என்றும், அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு அமைப்பை உருவாக்க மத்திய அரசு முன்வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Tags: amith shah
Share
Tweet
SendShare
Previous Post

‘ஒற்றுமை சிலை’ ஒரு பொறியியல் அதிசயம்! பிரதமர் மோடியை பாராட்டிய பில்கேட்ஸ்!

Next Post

தொடரும் கொலைகள் : அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொலை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies