நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தில் இருந்து ஒருவன் ஒருவன் முதலாளி என்ற பாடலை பாடினார் ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு வணிக துறை சார்பில் 3 நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி குளோபிஸ் என்ற பெயரில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் பங்கேற்றார்.
ஜப்பான்-இந்தியா நாடுகளின் வர்த்தக சூழல் தொடர்பாக வல்லுநர்களுடன் ஆங்கிலத்தில் அவர் கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின் முடிவில் பேசிய அவர் தமிழ் எனக்கு பிடித்த மொழி.எனக்கு நன்றாகவே தமிழ் தெரியும். தமிழ் சினிமா பாடலும் பாடுவேன் என்று குறிப்பிட்டார்.
அதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தில் இருந்து ஒருவன் ஒருவன் முதலாளி… உலகில் மற்றவன் தொழிலாளி… விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி என்று முழு பாடலையும் அவர் பாடினார்.
இதனால் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. அவர் பாடிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அத்துடன் தனக்கு தமிழ் படங்கள் பிடிக்கும், அதிலும் ரஜினி படங்கள் அதிகம் பிடிக்கும் என்று குறிப்பிட்ட கோபுகி சேன் தமிழ் திரைப்படங்களில் தான் ரசித்து பல விஷயங்களை பகிர்ந்தார்.