போலியோ சொட்டு மருந்தின் அவசியம் என்ன?
Mar 15, 2026, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலியோ சொட்டு மருந்தின் அவசியம் என்ன?

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதால் இளம்பிள்ளை வாத நோய் தடுக்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்தின் அவசியம் குறித்து இதில் காண்போம்.

குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்படாமல் இருக்க, ஆண்டுதோறும் வழக்கப்பட்டு வரும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம், தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 3) நடைபெறுகிறது.

“5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

இம்மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் (Transit Booths) சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போலியோ சொட்டு மருந்தின் முக்கியத்துவம்: 

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கக்கூடிய தொற்று மற்றும் ஆபத்தான வைரஸ் கிருமிகளால் ஏற்படக்கூடியது போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோய். இந்த நோயால் குழந்தைகளின் கை, கால் தசைகள் அல்லது சில உறுப்புகள் பாதிக்கப்பட்டு, அவற்றின் இயங்கும் சக்தி இழந்து, உடலில் நிரந்தர பக்கவாதம் ஏற்படுத்துகிறது.

சில நேரங்களில் போலியோ வைரஸ், பாதிக்கப்பட்ட நபரின் சுவாச தசைகளைத் தாக்கி, அசையாத தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் நோயாளிகள் தொற்று காரணமாக இறக்கவும் நேரிடும். இத்தகைய கொடிய போலியோ நோய்க்கு சிகிச்சைகள் ஏதும் இல்லை.

இவற்றை தடுத்து, குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழக்கப்பட்டு வருகிறது.

போலியோ இல்லாத தேசத்தை உருவாக்கவும், குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்குவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி உலக போலியோ தினம் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெறுவதால் தமிழகத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Tags: What is the need for polio drops?
ShareTweetSendShare
Previous Post

குண்டு வெடிப்பு நடந்த ராமேஸ்வரம் ஹோட்டலில் பெங்களூரூ போலீஸ் விசாரணை!

Next Post

இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies