சென்னை கோடம்பாக்கம் – தாம்பரம் ரயில் நிலையம் இடையே, பராமரிப்புப் பணி காரணமாக, 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் வசதிக்காக, 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் ப்ளூ லைன் மற்றும் கிரீன் லைன் இரண்டிலும் காலை 10:00 மணி முதல் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரவு 8:00 மணி வரை இயக்கப்படும்.
வழக்கமான ஞாயிறு கால அட்டவணையின்படி, காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை, ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மேலும், மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக காலை 10.00 மணி முதல் மதியம் 03.15 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது.