இந்தியாவில் நடைபெறுவரும் ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் இரண்டாம் நாள் முடிவில் மும்பை அணி 207 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று அரையிறுதி போட்டி தொடங்கியது. நேற்று இரண்டு அரையிறுதி போட்டிகள் தொடங்கியது . அதில் தமிழ் நாடு மற்றும் மும்பை அணிகள் விளையாடுகிறது.
இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுத்தது.
இதை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி முதல் நாள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 45 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் போட்டி நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் மும்பை அணிக்கு விக்கெட்கள் சரிந்துகொண்டே வந்தது.
அதில் முஷீர் கான் 55 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிசந்க்க ஒரு கட்டத்தில் மும்பை 7 விக்கெட்கள் இழப்பிற்கு 106 ரன்களை எடுத்திருந்தது.
அப்போது களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் சிறப்பாக விளையாடி 109 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் ஹர்திக் தாம்பூர் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
தனுஷ் கோட்யான் 74 ரன்களுடனும், துஷார் தேஷ்பாண்டே 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். தற்போது மும்பை நை 9 விக்கெட்கள் இழப்பிற்கு 353 ரன்களுடன் களத்தில் உள்ளது.
தமிழக அணியில் சாய் கிஷோர் 6 விக்கெட்களை வீழ்த்தினார். குலதீப் சென் 2 விக்கெட்களை வீழ்த்தினார். சந்தீப் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.