முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி இவர்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் பிரமாண்டமாக தொடங்கியது.
இந்த விழாவில் பல பிரபலங்களும் பங்கேற்றனர். இதில் ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் கலந்துகொண்டனர்.
அதேபோல் ஸக்கர்பெர்க், பில்கேட்ஸ், பாடகி ரிஹானா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் சர்மா, கிரோன் பொலார்டு, ஷாரூக்கான், சல்மான்கான், அக்சய் குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், இயக்குனர் அட்லீ என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் 3- வது நாளாக நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த்,மகள் ஐஸ்வர்யா ஆகியோர் குஜராத் ஜாம் நகருக்கு சென்றுள்ளார்.