கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் இன்று தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார், மேலும் தனது ராஜினாமா கடிதத்தை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் கல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அவர்,
“ வருகின்ற மார்ச் 5-ஆம் தேதி செவ்வாய்கிழமை கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமா கடிதத்தை இந்திய ஜனாதிபதிக்கும், கடிதத்தின் நகலை இந்திய தலைமை நீதிபதி மற்றும் கோல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்புவேன் என்றார்.