தமிழக பாஜக தலைமைக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அண்ணாமலை தலைமையில் தொடங்கியது.
சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அதன் தலைவர் அண்ணாமலை தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்துவது குறித்தும், பிரதமர் மோடி சென்னை வருகை குறித்தும் ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















