விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் 22 நாட்களாக மூடப்பட்டிருந்த அம்பாலா-சண்டிகர் நெடுஞ்சாலை இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
விவசாய பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 13ஆம் தேதி முதல் டெல்லியை நோக்கி பேரணியை தொடங்கினர். தற்போது இந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, 22 நாட்களாக மூடப்பட்டிருந்த அம்பாலா-சண்டிகர் நெடுஞ்சாலை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. அம்பாலா மற்றும் சண்டிகர் தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே போடப்பட்டிருந்த தடுப்புகளை ஹரியானா அரசு அகற்றி, சாலை போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கவலைகளுக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காணும்” என்று மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.