இலங்கை – வங்கதேசம் முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே 1 டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.
இதில் முதலில் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக சதீர சமரவிக்ரமா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் அசலங்கா 6 சிக்சர்கள் என மொத்தமாக 44 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குசல் மெண்டிஸ் 59 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் கமிந்து மெண்டிஸ் 19 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்தது.
வங்கதேச அணியில் இஸ்லாம், அஹ்மத், ரிஷாத் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் வங்கதேச அணிக்கு 207 என்ற கடின இலக்கு நிர்ணயிக்கபட்டது.
பின்னர் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக ஆனா லிட்டான் தாஸ் டக் அவுட் ஆகா சர்க்கார் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய மஹ்முதுல்லாஹ் 54 ரன்களும், ஜாகிர் அலி 66 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க போட்டி முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 203 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மத்தியூஸ், பெர்னாண்டோ, ஷானகா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அதேபோல் மதீஷா பத்திரனா, தீக்ஷனா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதன்மூலம் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 6 சிக்சர்கள் என மொத்தமாக 44 ரன்களை அடித்த அசலங்காவிற்கு வழங்கப்பட்டது.