இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரரான ஐதராபாத்தைச் சேர்ந்த சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் பேட்மிண்டன் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த 31 வயதான சாய் பிரனீத் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று, 2019 ஆம் ஆண்டில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தனது ஓய்வு குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 24 வருடமாக எனது உயிர்நாடியாக இருந்த பல உணர்வுகளைக் கொண்ட எனது விளையாட்டிலிருந்து விடைபெறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது வாழ்வின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள டிரையாங்கிள் பேட்மிண்டன் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக அடுத்த மாதத்தில் இணைய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.