மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் ஆர்.சி.பி வீராங்கனை எல்லிசி பெர்ரி அடித்த பந்து அங்குப் பரிசாக வைத்திருந்த காரில் பட்டு கார் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் 11வது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பபந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்களை எடுத்தது.
ELLYSE PERRY HAS BROKE THE GLASS OF THE CAR…!!! 🤯
– The reaction of Perry was priceless!! pic.twitter.com/zaxiQLLN1r
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 4, 2024
பின்னர் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 175 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆர்.சி.பி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆர்.சி.பி அணி பேட்டிங் செய்த போது உத்திரபிரதேச வீராங்கனை தீப்தி சர்மா வீசிய பந்தை பெங்களூரு வீராங்கனை எல்லிசி பெர்ரி ஓங்கி அடித்தார்.
அந்த பந்து நேரடியாக சிக்சர் லைனை தாண்டி அங்கு பரிசுக்காக வைக்கப்பட்டிருந்த காரில் விழுந்தது. இதில் கார் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது. கார் கண்ணாடியை உடைத்து விட்டோமே என்று எல்லிசி பெர்ரி தன் தலையில் கையை வைத்து அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.