இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், கேரளாவை சேர்ந்தவர் ஒருவர் பலியான நிலையில், அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வேண்டும் என இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம், அறிவுரை வழங்கியுள்ளது.
அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய போர் இன்னும் நீடித்து வருகிறது. இருதரப்பு போரை நிறுத்தக்கோரி பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் இன்னும் காசாவில் போர் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், வடக்கு இஸ்ரேலின் மார்காலியோட் பகுதியில் ஒரு விவசாய நிலப் பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது
உயிரிழந்தவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பத்னிபின் மேக்ஸ்வெல் என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. இஸ்ரேலின் ஜிவ் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் புஷ் ஜோசப் ஜார்ஜ், பால் மெல்வின் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் மூவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
காயமடைந்த ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் அருகே உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில்,
இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும், குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டும். இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
📢*IMPORTANT ADVISORY FOR INDIAN NATIONALS IN ISRAEL* pic.twitter.com/Fshw7zcbmj
— India in Israel (@indemtel) March 5, 2024
பாதுகாப்பு ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும், குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கில் உள்ள எல்லைப் பகுதிகளில் பணிபுரிபவர்கள் அல்லது வருகை தருபவர்கள், இஸ்ரேலுக்குள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.
“எங்கள் அனைத்து நாட்டினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தூதரகம் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது” என்று அது மேலும் கூறியது.
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கான அவசர தொடர்பு எண்களையும் வழங்கி உள்ளது,
24×7 அவசர உதவி எண்/தொடர்பு
தூதரகம்: தொலைபேசி +972-35226748
மின்னஞ்சல்: consl.telaviv@mea.gov.in
மாற்றாக, இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடியேற்ற ஆணையத்தின் ஹாட்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்: 1700707889
இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்கள் இந்த ஆலோசனையை பகிர்ந்து கொள்ளுமாறும் தூதரகம் கேட்டுக்கொள்கிறது.