தெலங்கானா மாநிலம் ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் பிரதமர் சாமி தரிசனம் செய்தார்.
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் நடைபெற்ற விழாவில் ரூ.7,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக செகந்திராபாத்தில் ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி கோயிலுக்கு சென்ற அவர் வழிபாடு நடத்தினார்.
மேலும் அவர் அர்ச்சனை செய்தார். அப்போது தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய மக்களின் ஆரோக்கியம், நலவாழ்வு மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளார்.
Prayed for the good health, well being and prosperity of all Indians at the Sri Ujjaini Mahakali Devasthanam, Secunderabad. pic.twitter.com/7v33OONdEA
— Narendra Modi (@narendramodi) March 5, 2024