உலகில் வாழும் மிகவும் வயதான நபரான மரியா பிரன்யாஸ் மோரேரா தனது 117வது பிறந்த நாளை ஸ்பெயினின் கேட்டலோனியாவில் நேற்று (மார்ச் 4) கொண்டாடினார்.
ஜனவரி 2023 முதல் உலகின் மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். முன்னதாக 118 வயதான பிரெஞ்சு நாட்டை சேர்ந்த லூசில் ராண்டனின் உலகின் மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார்.
அவரின் மறைவுக்கு பின்னர் தற்போது மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
மரியா 1907 ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். 8 வயதில், அவர் தனது குடும்பத்துடன் ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தார். 1918 இன் ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோய் மற்றும் ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரின் சோகமான காலங்கள் உட்பட அவரது வாழ்க்கையில் பல வரலாற்று நிகழ்வுகளை அவர் கண்டிருக்கிறார்.
1931 ஆம், அவர் ஜோன் மோரெட்டை மணந்தார், அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். அவரது கணவர், தொழில்ரீதியாக மருத்துவராக இருந்தார், 1976 இல் இறந்தார். இவரது மகன் தனது 86வது வயதில் டிராக்டர் விபத்தில் உயிரிழந்தார்.
தனது நீண்ட ஆயுளின் ரகசியம் குறித்து மரியா கூறுகையில், எனது அதிர்ஷ்டம் மற்றும் மரபணு காரணமாக இருக்கலாம் என கூறுகிறார்.
மேலும், அவர் ஒரு நிலையான வாழ்க்கை, அமைதி மற்றும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வலுவான உறவுகளை வலியுறுத்துகிறார். இது தவிர, இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் உணர்ச்சி பராமரிப்பது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
மேலும் அவர் தனது பிறந்த நாள் அன்று சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ” முதுமை என்பது ஒரு வகையான கலாச்சாரம். உங்களின் கேட்கும் சக்தி குறைகிறது ஆனால் இது நிகழும்போது நீங்கள் சத்தத்தை அல்ல, வாழ்க்கையை கேட்க ஆரம்பிக்கிறீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.