இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றின் மீது இண்டி கூட்டணிக் கட்சிகள் எப்போதும் வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றன என்று மத்திய அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
ஜெய் ஸ்ரீராம் மற்றும் இந்தியா பற்றிய திமுக எம்.பி. ஆ.ராசாவின் கருத்துகள் குறித்து மத்திய அமைச்சர் முரளீதரன் கூறும்போது, “இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றின் மீது இண்டி கூட்டணிக் கட்சிகள் எப்போதும் வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
அதை அவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வெளிப்படுத்தி உள்ளனர். இண்டி கூட்டணிக் கூட்டாளிகளால் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் நெறிமுறைகள் அவமதிக்கப்படுகிறது.
இந்தியா என்பதை எல்லாம் எதிர்த்தே இந்தத் தேர்தலை அவர்கள் அணுகப் போகிறார்கள் என்பது இப்போது இரட்டிப்பாகத் தெரிகிறது. அப்படிப்பட்டவர்கள் இந்தத் தேர்தல் மூலம் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தள்ளப்படுவார்கள் என்று கூறினார்.