ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, உடல்நலப் பிரச்னை காரணமாக, நான் பரிசோதனை மேற்கொண்டேன். எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான் சுய தனிமையில் உள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனையை முழுமையாகப் பின்பற்றி வருகிறேன். மேலும் வரவிருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், காணொலி காட்சி மூலம் பங்கேற்பேன் என்று பதிவிட்டுள்ளார்.
https://x.com/BhajanlalBjp/status/1765283540919558245?s=20