சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள எந்த அண்டை நாடுகளுக்கும் நேரம் ஒதுக்காமல், தங்கள் நாட்டில் மட்டுமே நிகழ்ச்சி நடத்துவதற்காக சூப்பர் ஸ்டார் பாடகியுடன் closed- door ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார்.
தற்போது இந்த தகவல் தெரியவந்ததை அடுத்து சமூக ஊடகங்களில் அவர் பேசும்பொருள் ஆகியுள்ளார்.மெல்போர்னில் நடைபெற்ற பிராந்திய உச்சிமாநாட்டில் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் லீ இதுகுறித்து பேசினார்.
தற்போது ஆசியா சுற்றுலாவில் கால்பதித்துளார் டெய்லர் ஸ்விப்ட்
மற்ற நாடுகளில் நிகழ்ச்சி நடத்துவதைத் தடுக்கும் வகையில் சிங்கப்பூரில் நிகழ்ச்சி நடத்துவதற்கு அந்நகர-மாநிலம் பாடகியுடன் closed -door ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை.
டெய்லர் ஸ்விப்ட் உடனான சிங்கப்பூரின் ஒப்பந்தம் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது, கடந்த மாதம் பிப்ரவரி 16 அன்று, மற்ற பிராந்திய நகரங்களில் நிகழ்ச்சி நடத்தாததற்கு ஈடாக, சிங்கப்பூர் ஒரு நிகழ்ச்சிக்கு $2 மில்லியன் முதல் $3 மில்லியன் வரை வழங்கியதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் குற்றம் சாட்டினார்.