இலங்கை – வங்கதேசம் 2வது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே 1 டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.
இதில் முதலில் டி20 போட்டி நடைபெறுகிறது. இதன் முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 37 ரன்களும், குடல் மெண்டிஸ் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதேபோல் ஏஞ்சலோ மேத்தியூஸ் 32 ரன்களும், ஷானகா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க அசலாங்கா 28 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது. வங்கதேச அணியில் அஹ்மத், மஹீடி ஹாசன், ரஹ்மான், சர்க்கார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் வங்கதேச அணிக்கு 166 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக லிட்டான் தாஸ் மற்றும் சர்க்கார் களமிறங்கினர். இதில் லிட்டான் தாஸ் 36 ரன்களும், சர்க்கார் 26 ரன்களும் எடுத்து இருவரும் மதீஷா பத்திரனா பந்தில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய சாண்டோ 53 ரன்களும், டவ்ஹித் ஹ்ரிடோய் 32 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் வங்கதேச அணி 18வது ஓவரில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 170 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் மதீஷா பத்திரனா 2விக்கெட்களை வீழ்த்தினார் மற்ற என்னத்த வீரர்களும் விக்கெட்டை வீழ்த்தவில்லை. இதனால் வங்கதேச அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இலங்கை மற்றும் வங்கதேசம் தலா 1 வெற்றிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.