பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள பி.வி.சிந்து தனது முதல் சுற்றுப் போட்டியில் கனடாவை சேர்ந்த மிச்சல்லியை வீழ்த்தினார்.
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து களமிறங்கினார்.
இவருடன் கனடாவை சேர்ந்த மிச்சல்லி போட்டியிட்டார். இதன் போட்டியின் முதல் சுற்றில் சிந்து 20-22 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார்.
இரண்டவாது சுற்றில் சிந்து 22-20 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றார். இருவரும் 1-1 என்ற புள்ளி கணக்குடன் சமிலையில் இருக்க மூன்றாவது சுற்று வெற்றியாளரை தீமானிக்கும் சுற்றாக அமைந்தது.
அதன்படி மூன்றாவது சுற்றில் சிந்து 21-19 என்ற புள்ளி கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். 80 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள பி.வி.சிந்து 2-1 என்ற செட் கணக்கில் மிச்செலை வீழ்த்தி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பி.வி.சிந்து தனது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு, பேட்மிண்டன் வேர்ல்ட் ஃபெடரேஷன் (BWF) உலக சுற்றுப்பயணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
அதேபோல் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-15, 20-22, 21-8 என்ற செட் கணக்கில் சீன தைபேவி சோவ் டைன் சென்னை தோற்கடித்தார்.
மற்றொரு போட்டியில் இந்திய வீரர் பிரனாய் 17-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் லு குவாங்சு