3 அடி உயரம் கொண்ட 22 வயதுடைய கணேஷ் பாரையா உலகிலேயே முதல் குள்ளமான மருத்துவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த 22 வயதுடைய டாக்டர் கணேஷ் பாரையா 3 அடி உயரம் கொண்டவர். இவரின் தந்தை ஒரு விவசாயி. இவருக்கு 7 சகோதரிகள் மற்றும் 1 சகோதரர் உள்ளனர்.
பிறக்கும் போதே குள்ளத்தன்மையுடன் பிறந்த இவரின் உடலில் 72 சதவீத அளவு லோகோமோட்டிவ் குறைப்பாடுடன் இருப்பது பிறந்தப்பின் கண்டறியப்பட்டது.
இவருடன் பிறந்தவர்களுக்கு 15 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. இவரின் குடும்பத்தில் யாரும் கல்லூரிக்கு சென்றதில்லை. ஆனால் கணேஷ் பாரையாவுக்கு டாக்டராக வேண்டும் என்ற பெரிய கனவு இருந்தது.
இவர் கணேஷ் 12ஆம் வகுப்பில் 87 சதவீத மதிப்பெண் மற்றும் NEET தேர்வில் 233 மதிப்பெண் எடுத்தார். பின்னர் கல்லூரியில் சீட்டு வாங்க சென்ற இவருக்கு சேட்டு தராமல் மறுக்கப்பட்டது.
பின்னர் உச்சநீதிமன்றம் சென்ற இவருக்கு Disability Act 2016 மூலம் மருத்துவம் படிப்பதற்கான அனுமதியை வழங்கியது. 18 கிலோ மட்டுமே உள்ள கணேஷ், பாவ்நகர் மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பை முடித்துவிட்டுத் தற்போது இன்டெர்ன்ஷிப் செய்து வருகிறார். அதேபோல் கிராமத்தில் இருக்கும் ஏழை மக்களைத் தேடிச் சென்று மருத்துவம் பார்க்கிறார்.
மனதளவில் பெரிய ஆளான இவரின் குரல் வளம், மென்மையாகக் குழந்தைத்தன்மைக் கொண்டதாக இருக்கிறது. அந்தக் குரலிலும் தனக்கானத் தன்னம்பிக்கை உணர்வைத் தேடிக் கண்டுபிடித்துத் தன்னை வளர்த்துக்கொண்டார் கணேஷ்.