திமுக அமைச்சர் பெரியகருப்பனின் உதவியாளருக்கு பல கோடி ரூபாய் டெண்டர் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில், கூட்டுறவுத்துறை அமைச்சராக பெரியகருப்பன் அங்கம் வகித்து வருகிறார்.
இந்த நிலையில், அமைச்சர் பெரியகருப்பனின் உதவியாளர் ஒருவருக்கு ரூ. 1.75 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு விளக்கம் கேட்டு, அமைச்சர் பெரியகருப்பனுக்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.