தமிழகத்தில் ஹிஜாவு மற்றும் ஐ.எப்.எஸ் போன்ற பெரிய நிதி நிறுவனங்களின் மோசடிகளுக்குப் பின்னணியாக இருந்து செயல்பட்டவர்களைத் தமிழக போலீசார் கண்டறிந்துள்ளனர்.
தமிழகத்தில் ஹிஜாவு மற்றும் ஐ.எப்.எஸ் போன்ற பெரிய நிதி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் குறைந்த மூதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, பொது மக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாகப் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாகப் பேசிய, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், தமிழகத்தில் ஹிஜாவு மற்றும் ஐ.எப்.எஸ் போன்ற பெரிய நிதி நிறுவனங்களின் மோசடி செய்துள்ளன. போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகியுள்ளன.
அதில், ஒரு ஏஜெண்ட் தனக்குக் கீழ் 100 நபர்களை வைத்துக் கொண்டு, நிறுவனத்தின் தொடக்கக் காலத்திலேயே அவர்களை இணைய வைத்து அதன் மூலம் திட்டமிட்டு பெரிய அளவில் கமிஷன் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், நிறுவனத்தில் லாபமடைவது போல, பலரை நம்பவைத்து, நிறுவனத்தில் இணைய வைத்துள்ளனர். வாடிக்கையாளர்கள் பலர் இணைந்தவுடன், அந்த ஏஜெண்ட் தனக்குக் கீழ் உள்ள நபர்களை அழைத்து வேறொரு நிறுவனத்தில் இணைந்து அடுத்த கட்ட மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது தொழிலை விரிவுபடுத்த ஹிஜாவு மற்றும் ஐ.எப்.எஸ் போன்ற பெரிய நிதி நிறுவனங்களே தனது ஏஜெண்டுகளுக்குக் கமிஷன் கொடுத்து இது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது என்றார்.
இதுபோன்று பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு வருகிறோம் என்கிறார்.