பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சிறப்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் வகையில் இந்திய ரயில்வே சட்டங்களில் பெண்கள் பாதுகாப்பாக ரயில்களில் பயணிக்கப் பல சட்டங்கள் உள்ளது.
அதில் பெண்களுக்கான 8 சிறப்பு வசதிகள் பற்றி பார்ப்போம் :
1. டிக்கெட் இல்லாமல் பயணம் :
ஒரு பெண் ரயில் பயணம் செய்யும் போது இரவில் நேரத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அப்பெண்ணை ரயிலில் இருந்து வெளியேற்ற TTE க்கு அதிகாரம் இல்லை. இரவு நேரத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
2. பெர்த் முன்பதிவு :
கர்ப்பிணிப் பெண்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது கீழ் படுக்கையை முன்பதிவு செய்யும் ஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது. அதேபோல் முதியவர்கள் மற்றும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு இதே போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
3. டிக்கெட் வாங்குதல் :
நேரில் சென்று பயண சீட்டு வாங்கும் போது பெண்களுக்கென தனி வரிசை இல்லை என்றால், டிக்கெட் கவுன்டர்களில் பெண்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. பெண்கள் காத்திருக்கத் தேவையில்லாமல் தனி வரிசை அமைத்து டிக்கெட் வாங்கலாம்.
4. தங்குமிடம் :
பெண் பயணிகளுக்கு விரைவு ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத வகையில் தங்கும் வசதிகள் உள்ளன. சில ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி வசதிகள் உள்ளன. இந்த ஏற்பாடுகள் பெண் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
5. முன்பதிவு பெட்டி :
விரைவு ரயில்களில் சாதாரண பெட்டிகளில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்துவிட்டு, அதே ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பெண்கள் பயணிக்க கூடிய வசதிகள் உள்ளது.
6. பெண்கள் மட்டுமே செல்லும் ரயில்கள் :
இந்தியாவில் பெண்கள் மட்டுமே இயக்கும் பெண்களுக்காக தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள்ளும் உள்ளது.
இதுபோன்ற ரயில்கள் உள்ளனவா என்பதை ரயில்வே அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெண் பயணிகள் கேட்டறிந்துகொண்டு பயன்பெறலாம். இந்த சிறப்பு ரயில்கள் பெண் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
7. காத்திருக்கும் பகுதிகள் :
இந்தியாவில் உள்ள பல ரயில் நிலையங்களில், பெண் பயணிகளுக்கு வசதியாகவும், பாதுகாப்பாகவும் தனித்தனி காத்திருப்பு அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
8. உதவி எண் :
ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அவர்கள் 182 என்ற உதவி எண்ணுக்கு அழைத்து உதவி கேட்கலாம்.