2024 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிட்டி இண்டெக்ஸ் உலகம் முழுவதும் உள்ள பெண் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை வெளியிட்டது.
இதில் உலகின் பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 15 பெண்களுடன் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் 97 பெண்களுடன் அமெரிக்கா முதல் இடத்திலும், 42 பெண்களுடன் சீனா 2வது இடத்திலும், 22 பெண்களுடன் ஜெர்மனி மூன்றாவது இடத்திலும், 19 பெண்களுடன் இத்தாலி 4வது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில் தற்போது உலகின் பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ள முதல் 10 இந்திய பெண்களை பற்றி பார்ப்போம்.
1. சாவித்ரி ஜிண்டால் :
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் சாவித்ரி ஜிண்டால். இவர் $29.1 பில்லியன் சொத்து மதிப்பை கொண்டுள்ளார்.
2. ரோஹிகா :
இதில் இரண்டாவது இடத்தில் ரோஹிகா சைரஸ் மிஸ்திரி உள்ளார. இவர் மறைந்த சைரஸ் மிஸ்திரியின் மனைவியாவார். இவரிடம் $8.7 பில்லியன் சொத்து மதிப்புள்ளது.
3. ரேகா ஜுன்ஜுன்வாலா :
இதில் மூன்றாவது இடத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலா உள்ளார். பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக் குறைவால் 2022ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து, அவரின் பங்கு போர்ட்ஃபோலியோ அவரின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலாவிடம் உள்ளது. இவரிடம் $8 பில்லியன் சொத்து மதிப்புள்ளது.
4. வினோத் ராய் குப்தா :
இதில் மூன்றாவது இடத்தில் வினோத் ராய் குப்தா இருக்கிறார். இவரின் கணவர் இறந்த பின் அவரின் ஹேவெல்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை இவர் வழிநடத்துகிறார். இவரிடம் $4.2 பில்லியன் சொத்து மதிப்புள்ளது.
5. ஸ்மிதா கிருஷ்ணா-கோத்ரேஜ் :
கோத்ரேஜ் குழுமத்தை சேர்ந்த ஸ்மிதா கிருஷ்ணா கோத்ரேஜ் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 3.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.
6. லீனா திவாரி :
சக்கரை நோய், இதய நோய் உள்ளிட்டவைக்கு மருந்து தயாரிக்கும் யுஎஸ்வி நிறுவன தலைவர் லீனா இந்த பட்டியலில் 6வது இடத்தில உள்ளார். இவரின் சொத்து மதிப்பு $3.2 பில்லியன் ஆகும்.
7. ஃபால்குனி நாயர் :
நைக்கா நிறுவதின் நிறுவனர் ஃபால்குனி நாயர் இந்த பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலராக உள்ளது.
8. அனு ஆகா :
எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனமான தெர்மாக்ஸை(Thermax) அனு ஆகா இந்த பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளார். இவரிடம் $2.8 பில்லியன் சொத்து மதிப்புள்ளது.
9. கிரண் மஜும்தார்-ஷா :
பெங்களூரில் உள்ள பயோகான் லிமிடெட்டின் தலைவரான கிரண் மஜும்தார்-ஷா இந்த பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு $2.5 பில்லியன் ஆகும்.
10. ராதா வேம்பு :
Zoho கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் ராதா வேம்பு இந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு $2.1 பில்லியன் ஆகும்.