மதுரையைச் சேர்ந்தவர் விஜயராகவன் (48) என்பவர் வி3 ஆன்லைன் டிவி, மைவி3 ஆட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கினர். இவர், நிறுவனங்கள் தொடங்கி பொது மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது மைவி3 ஆட்ஸ் உரிமையாளராக கோவை வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சக்தி ஆனந்தன் (43) உள்ளார்.
இந்த நிலையில், சக்தி ஆனந்தன் மீதும் மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் போலி வாக்குறுதி கொடுத்து 20 ஆயிரம் கோடி வரை இவர் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் மதுரையில் தங்கியிருந்த விஜயராகவனை போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அதிக ரத்த அழுத்தம், நீரழிவு நோய் பாதிப்பின் காரணமாகக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூன்று நாள் தீவிர சிகிச்சைக்குப் பின்னர், மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.