சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மகளிர் தினம் உலகமுழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. இந்த டூடுல் ஓவியத்தை சோஃபி டியாவோ (Sophie Diao) என்பவர் வடிவமைத்துள்ளார்.
இந்த சிறப்பு டூடுலில் ஒரு பெண் குழந்தை, ஒரு நடுத்தர வயது பெண் மற்றும் ஒரு வயதான பெண்மணி என மூன்று தலைமுறையினரும் இடம்பெற்றுள்ளனர்.
ஒரு பெண் சிறு வயது முதல் வயது முதிர்வு வரை உள்ள காலகட்டதை எடுத்துரைக்கும் வண்ணம் இந்த டூடுல் அமைந்துள்ளது.
மூன்று தலைமுறை பெண்களுன் அறிவு, முன்னேற்றத்தை ஒருவருக்கொருவர் பகிந்துகொள்வது அதன் ஏற்படும் வளர்ச்சி, மேம்பாடு குறித்து டூடுல் ஓவியத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜமக்காளம் போன்ற ‘Quilt’ வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், கல்வி, கலை, இலக்கியம், நீதி உள்ளிட்டவை குறித்து காட்சிப்படுத்தப்படுள்ளது.