மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் கல்வி அமைச்சரின் நெருங்கிய கூட்டாளிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மம்தா தலைமையிலான அமைச்சரவையில், கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. மாநிலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இவர் பெரிய அளவில் ஊழல் செய்துள்ளார்.
இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக அப்போதைய கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஆசிரியர் நியமான ஊழல் வழக்கு தொடர்பாக, கொல்கத்தா உட்பட பல்வேறு இடங்களில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளி எனக் கருதப்படும், முன்னாள் ஆசிரியரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கொல்கத்தாவை ஒட்டியுள்ள நியூ டவுனில், 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், நாகர்பஜார் பகுதியில் உள்ள கணக்காளர் ஒருவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.