ராமேஸ்வரம் கபே வெடி குண்டு வழக்கு - முக்கியக் குற்றவாளி கைது!
Oct 29, 2025, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமேஸ்வரம் கபே வெடி குண்டு வழக்கு – முக்கியக் குற்றவாளி கைது!

Web Desk by Web Desk
Mar 8, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமேஸ்வரம் கபே வெடி குண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான பெங்களூரைச் சேர்ந்த டெட்டனு என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு மாரத்தஹள்ளி அடுத்த புரூக்பீல்டில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில், இந்த மாதம் 1 -ம் தேதி, திடீரென குண்டு வெடித்தது. இதில், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடி குண்டு வெடிப்பு விவகாரத்தில், சிரியா நாட்டு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதனால், தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணையில் குதித்து. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது.

இதனிடையே, குண்டு வைத்தவர் குறித்த தகவல் அளித்தால் ரூ.10.லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவர்கள் விபரம் ரகசியம் காக்கப்படும் என்றும் என்.ஜ.ஏ. தெரிவித்தது.

இந்த நிலையில், குண்டு வெடிப்பு விவகாரத்தில், முக்கிய நபரை மத்திய புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது. பெல்லாரியைச் சேர்ந்த டெட்டனு என்ற நபரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. என்.ஐ.ஏ. விசாரணையில், டெட்டனு துணி வியாபாரம் செய்து வந்ததும், அதே வேளையில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும், டெட்டனு, குண்டு வெடித்த பின்னர், பெல்லாரி, தும்கூரு, பிடார் மற்றும் பட்கல் உள்ளிட்ட இடங்களுக்கு டெட்டனு சென்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: Rameswaram Cafe Bombing Case - Main Accused Arrested!
ShareTweetSendShare
Previous Post

எல்லையில் நீடிக்கும் பதற்றம்: படைகளை குவிக்கும் இந்தியா!

Next Post

மகா சிவராத்திரி! – நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

மாசை குறைக்க ‘மேக விதைப்பு’ முயற்சி – எதிர்பார்த்த பலனை அளிக்காததால் ஏமாற்றத்தில் டெல்லி மக்கள்!

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

குடியரசு தின விழா – உலக தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு!

தர்ஷன் சிங் சஹாசி கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்காசியில் முதலமைச்சர் நிகழ்ச்சி – போதிய பேருந்துகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதி!

கர்நாடகா : இந்தியாவின் சொந்த டிரைவரில்லா கார் அறிமுகம்!

ஜமைக்கா : மெலிசா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

சீனாவில் கிட்னிக்காக புற்றுநோயாளியை திருமணம் செய்து கொண்ட பெண்!

உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளது – ராஜ்நாத் சிங்

மகாராஷ்டிரா : விதிகளை மீறிய போலீசாரை துரத்தி பிடித்த இளைஞர் – வீடியோ வைரல்!

பாகிஸ்தான் : இந்தியாவை ஆதரிப்போம் என வெளிப்படையாக பொது வெளியில் பேசிய மதகுரு!

மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியை கொலை செய்தவர்கள் கைது!

சாட் ஜிபிடியிடம் தற்கொலை எண்ணங்களுடன் உரையாடும் மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies