சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள எந்த அண்டை நாடுகளுக்கும் நேரம் ஒதுக்காமல், தங்கள் நாட்டில் மட்டுமே நிகழ்ச்சி நடத்துவதற்காக பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டுடன் closed- door ஒப்பந்தம் செய்திருந்தார்.
இந்நிலையில் அதற்கு பலன் கிடைக்கும் வகையில், தற்போது சிங்கப்பூரின் பொருளாதாரம் ஜிடிபி கடந்த மார்ச் 31 ஆம் தேதி கணக்கெடுப்பின்படி 2.9% சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் சுற்றுலா நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
ப்ளூம்பெர்க் ஆய்வு கணக்கெடுப்பின் சராசரி மதிப்பீட்டின்படி, மார்ச் 31 ஆம் தேதியுடன் இந்த ஆண்டின் கடந்த மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.9% அதிகரித்தது, இது ஆறு காலாண்டுகளில் மிக விரைவான பொருளாதார வேகம் என்றும் . 2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் 1% -3% கணிப்பின் படி இறுதியில் காணப்பட்ட 2.3% இல் இருந்து சிங்கப்பூர் அரசு தனது ஆண்டு வளர்ச்சி எதிர்பார்ப்பை 2.5% ஆக உயர்த்தியுள்ளது.
தி சிங்கப்பூர் “leg of the Eras tour” ஆனது மார்ச் 9 வரை ஆறு இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. இது சிங்கப்பூரின் விருந்தோம்பல், உணவு & பானங்கள் மற்றும் சில்லறை விற்பனைகளுக்கு அதிக வருமானம் வழங்கியுள்ளது என்று DBS வங்கி லிமிடெட் பொருளாதார நிபுணர் ஹான் டெங் சுவா கூறுகிறார்.
” டெய்லர் ஸ்விப்ட்டின் சிங்கப்பூர் கச்சேரிகளில் ஏராளமான வெளிநாட்டு ரசிகர்கள் கலந்துகொள்வதால், அதிக வெளிநாட்டு சுற்றுலாச் செலவுகளால் இவை முக்கியமாக ஆதரிக்கப்படும்” என்று சுவா கூறினார், நிகழ்ச்சிகள் சுமார் $300 மில்லியன்-$400 மில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவீத புள்ளிகளைச் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.