பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன வீரர் லி சைபெங்கை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் களமிறங்கினார்.
இவருடன் சீனாவை சேர்ந்த லி சைபெங் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் சுற்றில் சீனா வீரர் லி சைபெங் 21 புள்ளிகள் எடுத்து 21-16 என்ற புள்ளிகணக்கில் இந்திய வீரரை முந்தினார்.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் லக்சயா சென் 21 புள்ளிகளை பெற்று 21-15 என்ற புள்ளி கணக்கில் போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார்.
இதை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கு மூன்றாவது சுற்று நடைபெற்றது. அந்த சுற்றில் இந்திய வீரர் லக்சயா சென் 21 புள்ளிகளை பெற்று 21-13 என்ற புள்ளி கணக்கில் மூன்றாவது சுற்றை வென்றார்.
இந்நிலையில் இந்திய வீரர் லக்சயா சென் 16-21, 21-15,21-13 என்ற செட்டில் 2-1 என்ற கணக்கில் சீன வீரர் லி சைபெங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் இந்திய வீரர் லக்சயா சென் சிங்கப்பூர் வீரர் லோஹ் கியன் யெவ் உடன் விளையாடவுள்ளார்.