அமெரிக்காவில் விமானம் ஒன்று பறக்கும் போது, அதில் இருந்து டயர் ஒன்று கழன்று கீழே விழுந்த நிலையில், விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விமானம் ஒன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து ஜப்பானுக்கு புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த நிலையில், விமானம் உயரக்கிளம்பிய போது, திடீரென விமானத்தின் ஒரு டயரானது தனியாக கழன்று விழுந்தது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அலறினர். அந்த டயர் ஒரு காரின் பின்பக்க கண்ணாடியில் விழுந்து, பின்னர் அருகில் இருந்த வேலியின் மீது மோதி நின்றது.
இதை அடுத்து, 6 டயர்களில் ஒரு டயர் இல்லாமல் பறந்த விமானம், பாதுகாப்புக் கருதி லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானியின் சாதுரியத்தால், 200-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். பின்னர், பயணிகள் வேறு விமானத்தில் சென்றனர்.
விமானத்தின் டயர் கழன்று விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.