இந்திய இராணுவம் மற்றும் கடலோரக் காவல்படைக்கு, சுமார் ரூ.8,000 கோடி செலவில், 34 புதிய துருவ் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
34 புதிய மேம்படுத்தப்பட்ட இலகு ரக துருவ் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் ரூ.8,000 கோடி செலவில் துருவ் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளது. இவற்றில், 9 ஹெலிகாப்டர்கள் இந்தியக் கடலோரக் காவல்படையிலும், 25 ஹெலிகாப்டர்கள் இந்திய இராணுவத்திலும் இணைக்கப்படும்.
இந்த ஹெலிகாப்டர்களை, பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்க உள்ளது.
இந்தியக் கடலோரக் காவல்படையில் உள்ள பழைய இலகு ரக ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக புதிய ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய இராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.