பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்தை மீட்டெடுக்க ஏன் துடித்தார் என்பதை தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்குவாரா? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனத எக்ஸ் பதிவில்,
அக்டோபர் 2021 முதல், தமிழக பாஜக, 4472 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை பிஜிஆர் எனர்ஜிக்கு திரும்ப வழங்காத திமுக அரசின் முடிவுக்கு எதிராக பலமுறை குரல் கொடுத்துள்ளது. கோபாலபுரம் குடும்பத்தினரும், தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் இலாகா இல்லாத முன்னாள் அமைச்சரும், வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்க வேண்டாம் என்ற எங்கள் கோரிக்கைக்கு திமுக செவிசாய்க்கவில்லை.
புத்துயிர் பெறுவதற்கான அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பிறகு, TANGEDCO இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஒப்பந்தத்தை புத்திசாலித்தனமாக ரத்துசெய்தது மற்றும் BGR சமர்ப்பித்த ₹128 கோடி வங்கி உத்தரவாதத்தை மீட்டெடுத்தது.
தற்போது மீண்டும் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தமிழக முதல்வர் ஸ்டாலின்
குறைந்த பட்சம் இந்த நிறுவனத்தை மீட்டெடுக்க அவர் ஏன் துடித்தார் என்பதை தமிழக மக்களுக்கு விளக்குவாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஜிஆர் எனர்ஜி நிறுவன ஊழல் கடந்து வந்த பாதை
கடந்த 2014 ஆம் ஆண்டு, Lanco Infratech என்ற நிறுவனத்திற்கு, எண்ணூர் அனல் மின்நிலையத்தில், 1×660 மெகாவாட் மிக உய்ய மின்சார திட்டத்திற்கான
ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
பின்னர், கடந்த 11.12.2019 அன்று, சுற்றுச்சூழல் அனுமதி புதுப்பிக்கப்பட்டு, 12.12.2019 அன்று, BGR Energy Systems நிறுவனத்திற்கு ₹4,472 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
சில மாதங்களுக்குப் பிறகு, கடந்த 23.04.2021 அன்று, தமிழ்நாடு மின்சார வாரியம், BGR Energy Systems நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான கடிதத்தை (LOI) ரத்து செய்வதாகக் கடிதம் அனுப்பியது.
Since October 2021, @BJP4TamilNadu has repeatedly voiced against the DMK govt's decision not to award the ₹4472 Crore contract back to BGR Energy. The Gopalapuram family & the former Minister without portfolio, who is currently imprisoned for corruption, never heeded our request… pic.twitter.com/7a509uQSWE
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 9, 2024
இதனை அடுத்து, கடந்த 28.04.2021 அன்று, BGR Energy நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில், BGR நிறுவனத்தின் சார்பாக, திமுக மாநிலங்களவை உறுப்பினரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார்.
பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உயர்மட்டக் குழு, BGR Energy நிறுவனத்திற்கே மீண்டும் ஒப்பந்தம் வழங்க உத்தரவிட்டது.
கடந்த அக்டோபர் 2021 இல், கோபாலபுரம் குடும்பம், BGR நிறுவனம் மற்றும் முன்னாள் துறையற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் தொடர்பை தமிழக பாஜக அம்பலப்படுத்தியது.
பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் BGR நிறுவனம் தங்களிடையே ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு எதிராகத் தொடர்ந்த ரிட் மனுவை, BGR நிறுவனம் வாபஸ் பெற்றது.
அதற்குப் பிறகு, கடந்த 09.03.2022 அன்று, புதிய தொடக்கத் தேதி குறிப்பிட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம், BGR நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைப் புதுப்பித்தது.
கடந்த 19.08.2023 அன்று, BGR Energy நிறுவனத்திற்கு, தமிழ்நாடு மின்சார வாரியம் அனுப்பிய கடிதத்தை தமிழக பாஜக வெளியிட்டது, அதில் ஒப்பந்தத்தைப் புதுப்பித்து 15 மாதங்களுக்குப் பிறகும், திட்டத்தை நிறைவேற்ற BGR Energy நிறுவனம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், BGR நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தம், சத்தமே இல்லாமல் ரத்து செய்யப்பட்டது, கடனில் மூழ்கியிருந்த BGR Energy நிறுவனத்திற்கு உயிர்கொடுக்க கோபாலபுரம் குடும்பம் செய்த முயற்சி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் இருப்பதால் தோல்வியுற்றது.
கடந்த பிப்ரவரி 5, 2024 அன்று, ஒப்பந்தப்படி, பணியைத் தொடங்குவதில் ஏற்பட்ட காலதாமதத்தினால், BGR நிறுவனம் வழங்கிய ரூ.128 கோடி வங்கி உத்தரவாதத்தை, வேறு வழியின்றி தமிழ்நாடு மின்சார வாரியம் கையகப்படுத்தியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.