கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 39 வேட்பாளர்கள் பெயர் அடங்கியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மற்றொரு மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், கேளர மாநிலம் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியில் களம் காண்கிறார்.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் மனைவி கீதா, கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதியிலும், சத்திஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஸ் பாகர் ராஜ்நந்த்கான் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே வெளியாகும் என கூறப்படுகிறது.