100 டெஸ்ட் போட்டிகளில் 36 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம், 132 டெஸ்ட் போட்டிகளில் 35 விக்கெட்களை வீழ்த்திய அனில் கும்ப்லேவின் சாதனையை முறியடித்துள்ளார் ரவிச்சந்திர அஸ்வின்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி தர்மசாலா மைதானத்தில் நடைபெற்று வந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் களமிறங்கிய இந்தியா 477 ரன்களை எடுத்தது. இதை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 195 ரன்களை மட்டுமே எடுத்ததால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
இந்த போட்டியில் 5-விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற கும்ப்ளேவின் (35 முறை) சாதனையை முறியடித்து அஸ்வின் ( 36 முறை) புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி தனது அறிமுக டெஸ்ட் போட்டி மற்றும் 100 வது டெஸ்ட் போட்டி என இரண்டிலும் 5 விக்கெட்களை வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் அஸ்வின்.