மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் 16வது போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடவுள்ளது.
இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி இந்த தொடரில் தான் விளையாடிய 6 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டியில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதேபோல் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி தாங்கள் விளையாடிய ஐந்து போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்று நான்கு போட்டியிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.