இலங்கை – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே 1 டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.
இதில் முதலில் டி20 போட்டி நடைபெறுகிறது. இதன் முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கப்போகும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 6 பௌண்டரீஸ் மற்றும் 6 சிக்சர்கள் என மொத்தமாக 86 ரன்களை எடுத்தார்.
ஹசார்ங்கா 15 ரன்களும், ஷானகா 19 ரன்களும், ஏஞ்சலோ 10 ரன்களும் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தனர். இதனால் இலங்கை அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்தது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக அஹ்மத் மற்றும் ரிஷாத் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அதேபோல் ரஹ்மான் மற்றும் இஸ்லாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
இதை தொடர்ந்து வங்கதேச அணி களமிறங்கியது. இதில் ஆரம்பத்தில் இருந்தே அடுத்ததடுத்து விக்கெட்களை இழந்துகொண்டே வந்தது வங்கதேச அணி.
அந்த நிலையில் 3வது ஓவரை வீசிய நுவான் துஷாரா 2வது பந்தில் கேப்டன் சாந்தோவை 1 ரன்னில் க்ளீன் போல்ட்டாக்கி அடுத்ததாக வந்த தவ்ஹீத் ஹ்ரிடாயையும் 3வது பந்தில் 0 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார்.
அத்தோடு நிற்காத அவர் அதற்கடுத்த பந்தில் முகமதுல்லாவை எழுபிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டாக்கி ஹார்ட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் லசித் மலிங்கா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்செயா, வணிந்து ஹசரங்கா ஆகியோருக்குப் பின் ஹாட்ரிக் விக்கெட் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 5வது வீரர் என்ற சாதனையை நுவான் துஷாரா படைத்தார்.
இதனால் வங்கதேச அணியால் இலக்கை எட்ட முடியாமல் 19.4வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இலங்கை அணியில் அதிகபட்சமாக ஹட் ட்ரிக் வீரர் நுவான் துஷாரா 5 விக்கெட்களை எடுத்தார். ஹசரங்கா 2 விக்கெட்களை வீழ்த்தினார். தீக்ஷனா, ஷானகா, சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதன் மூலம் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் இந்த தொடரை வென்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 5 விக்கெட்களை வீழ்த்திய ஹட் ட்ரிக் வீரர் நுவான் துஷாராவுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் தொடர் நாயகன் விருது இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.