பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்,
“2014க்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் விவசாய பட்ஜெட் ரூ.25 ஆயிரம் கோடியாக இருந்தது, பாஜக ஆட்சியில் இன்று ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. நெற்பயிரின் தற்போதைய MSPயில் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது.
“பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இதை நான் அல்ல, நிதி ஆயோக் தான் கூறுகிறது. மீண்டும் பிரதமர் மோடி
ஆட்சி அமையும் போது ஒருவரைக் கூட வறுமைக் கோட்டின் கீழ் வாழ அனுமதிக்க மாட்டோம். மொத்தமாக நாட்டில் வறுமை ஒழியும் எனத் தெரிவித்தார்.