எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘X’ (எக்ஸ்) யூடியூப்க்குப் போட்டியாக long-form videos பார்ப்பதற்கான செயலியை சோதனை செய்து வருகிறது என எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் முதற்கட்டமாக நிறுவனம் இப்போது ஸ்மார்ட் டி.வி-களுக்காக ஒரு பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில், இந்த பயன்பாடு Fire OS (Amazon) மற்றும் Tizen OS (Samsung) ஆகியவற்றில் இயங்கும் தொலைக்காட்சிகளுக்குக் கிடைக்கும். மேலும் நிறுவனம் Google TV OS மற்றும் Apple tvOS போன்ற பிற பிரபலமான தளங்களுக்கு விரிவுபடுத்தும் என்று கூறியுள்ளார்.
பிரத்யேக டி.வி செயலி குறித்து ‘X’ தளத்தில் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில் எலான் மஸ்க் இதை உறுதி செய்தார். யூடியூப் தற்போது உலகின் மிகவும் பிரபலமான இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும். இதற்கு எலான் மஸ்க் X தளம் மூலம் ஒரு மாற்று தளத்தை கொண்டு வர முயற்சி செய்கிறார்.
Coming soon https://t.co/JlnlSL7eS9
— Elon Musk (@elonmusk) March 9, 2024
எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். ட்விட்டரின் பெயரை X என மாற்றினார். அதோடு எலான் மஸ்க் X தளத்தை அனைத்து வசதியையும் உள்ளடக்கிய செயலியாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். X- “ an everything app” என்ற பெயரில் மாற்ற முயற்சி செய்து வருகிறது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக X தளத்தில் ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஜிமெயிலுக்கு மாற்றாக Xமெயில், பேமெண்ட் வசதிகள், தற்போது யூடியூப்க்குப் மாற்றாக X டி.வி செயலி ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.