உத்திரமேரூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மயான கொள்ளை உற்சவத்தில் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி கோலாகலமாக கொண்டாடினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் மயான கொள்ளை உற்சவம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
உத்தரமேரூர் அங்காளம்மன் கோவிலில் இந்த ஆண்டிற்கான மாசி மாத மயான கொள்ளை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சக்திகரகம், பூங்கரகம், அக்னி கரகம், ஏந்தி, தாரை தப்பட்டைகள் முழங்க
மங்கல இசை வாத்தியங்களுடன் உத்தரமேரூர் மாடவீதிகளில் , புஷ்பக விமானத்தில் அங்காளம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பக்தர்கள் உடலில் அலகுகள் குத்தி, உரல், தேர் ஆகியவற்றை இழுத்து சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும் லாரி, ஆட்டோ, ஜேசிபி, டிராக்டர் ஆகியவற்றில், பக்தர்கள் உடல் முழுதும் அலகுகள் குத்தி அந்தரத்தில் தொங்கியவாறு பறவை காவடி எடுத்தும்,
உடல் முழுவதும் அலகுகள் குத்திவாறு மாட வீதிகளில் வலம் வந்து, பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் செலுத்தினர். மயான கொள்ளை திருவிழாவால் உத்திரமேரூர் நகர் முழுதும் திருவிழாக்கோலத்தில் காட்சியளித்தது.