96-வது ஆஸ்கார் விருது : வெற்றியாளர்கள் யார் யார்?
Jul 15, 2025, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

96-வது ஆஸ்கார் விருது : வெற்றியாளர்கள் யார் யார்?

Web Desk by Web Desk
Mar 11, 2024, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்கார் விருது, அகாடமி விருது என்றும் அழைக்கப்படுகிறது, இது அமெரிக்க திரைப்பட கலைகள் மற்றும் அறிவியல் அகாடமி (AMPAS) ஆல் திரைப்படத் துறையில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும் வருடாந்திர விருதாகும்.

அகாடமி விருதுகள் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இந்த ஆஸ்கார் விருது திரைத்துறையின் பல பிரிவுகளில் சாதித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள டால்பி தியேட்டரில் 96-வது ஆஸ்கர் விருது விழா இன்று தொடங்கியுள்ளது. இந்த ஆஸ்கார் விருது விழாவை ஜிம்மி கிம்மல் 4வது முறையாக தொகுத்து வழங்கி உள்ளார்.

இந்த ஆஸ்கார் விருது விழாவில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் , சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த திரைப்பட எடிட்டிங், சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றுக்கு ஓபன்ஹெய்மர் பரிந்துரைக்கப்பட்டு விருதும் வென்றுள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இந்தப் படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் மொத்தம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ஓபன்ஹைமர் படம் ஏழு பிரிவுகளிலும், மற்ற படங்கள் ஆறு பிரிவுகளிலும் விருதுகளை வென்றன.

சிறந்த இயக்குனர்

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் தனது 15 வருட திரைப் பயணத்தில் முதல்முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். இதற்கு முன்பு இவர் 7 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகர்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன் ஹெய்மர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சிலியன் முர்ஃபிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை Da’Vine Joy Randolph வென்றுள்ளார். ‘The Holdovers’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் குறும்படம்

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ஜான் மற்றும் யோகோவின் இசையால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட War Is Over என்கிற குறும்படத்துக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை ‘தி பாய் அண்ட் தி ஹெரான்’ திரைப்படம் வென்றுள்ளது. ஹயாவ் மியாசாகி மற்றும் தோஷியோ சுசுகி ஆகியோர் அவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை

சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ திரைப்படம் தட்டிச் சென்றது. ஜஸ்டின் ட்ரைட் மற்றும் ஆர்தர் ஹராரி ஆகியோர் அவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

சிறந்த தழுவல் திரைக்கதை

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை ‘அமெரிக்கன் ஃபிக்‌ஷன்’ திரைப்படம் வென்றுள்ளது. கார்ட் ஜெபர்சன் அவ்விருதை பெற்றுக்கொண்டார்.

சிறந்த மேக்கப்

சிறந்த மேக்கப் கலைஞருக்கான ஆஸ்கர் விருதை நதியா ஸ்டாசே, மார்க் கூலியர் மற்றும் ஜோஷ் வெஸ்டன் ஆகியோர் வென்றுள்ளனர். புவர் திங்ஸ் திரைப்படத்திற்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ஜேம்ஸ் பிரைஸ் மற்றும் சோனா ஹீத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். புவர் திங்ஸ் திரைப்படத்திற்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதும் புவர் திங்ஸ் திரைப்படத்துக்கு தான் கிடைத்துள்ளது. அப்படத்திற்கு ஆடை வடிவமைப்பு செய்த ஹோலி வேடின்சன் அவ்விருதை பெற்றுக்கொண்டார்.

சிறந்த சர்வதேச திரைப்படம்

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை The Zone of Interest என்கிற பிரிட்டன் படத்திற்கு கிடைத்துள்ளது. அப்படத்தின் இயக்குனர் ஜோனாதன் கிலாசர் அவ்விருதை பெற்றுக்கொண்டார்.

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ராபர்ட் டவுனி ஜூனியர் வென்றுள்ளார். ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது.

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்

Godzilla Minus One திரைப்படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

சிறந்த படத்தொகுப்பு

சிறந்த படத்தொகுப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ஜெனிஃபர் லேம் வென்றுள்ளார். ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஆவணப்படம்

சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 20 Days in Mariupol வென்றுள்ளது. செர்னோவ், மிச்லே மிஸ்னர், ரேனே அரான்சன் ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

சிறந்த ஒளிப்பதிவு

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை ஹொய்டி வேன் ஹொய்டிமா வென்றுள்ளார், ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை The Wonderful Story of Henry Sugar என்கிற குறும்படம் வென்றிருக்கிறது.

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்

சிறந்த ஒரினினல் ஸ்கோர் இசைக்கான ஆஸ்கர் விருதை லுட்விக் கொரான்சன் வென்றிருக்கிறார். ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஒரிஜினல் பாடல்

பார்பி படத்தில் இடம்பெற்ற What Was I Made For? என்கிற பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

Tags: 96th Oscars: Who are the winners?
ShareTweetSendShare
Previous Post

ஜாபர் சாதிக் வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

Next Post

உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலுக்கு தயாரான ரஷ்யா! – புதினை தடுத்த பிரதமர் மோடி

Related News

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!

பீகார் வாக்காளர் பட்டியலில் நேபாள், வங்கதேச நபர்கள் : தேர்தல் ஆணையம் “ஷாக்” ரிப்போர்ட்!

அகமதாபாத் விமான விபத்து : 10 வினாடிகள் மர்மம் நடந்தது என்ன?

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

திகில் காட்டில் திக்! திக்! : குகையில் 2 குழந்தைகளுடன் இருந்த ரஷ்ய பெண் மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரயில் விபத்தால் கரும்புகை : கண் எரிச்சல், மூச்சு திணறலால் தவித்து வரும் திருவள்ளூர் மக்கள்!

செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் : தகாத இடத்தில் தொட்டு கைது செய்ததாக பெண் ஆசிரியர்கள் புகார்!

கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டதன் பின்னணி!

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ : அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை பக்தர்கள் விடுதியில் அறைகள் ஒதுக்கீடு!

அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் : எல். முருகன் கண்டனம்!

திருவாரூர் : அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தால் அதிர்ச்சி!

நிமிஷா விவகாரம் – மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்!

டிராகன் விண்கலம் மூலம் பூமியை நோக்கி புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

மகாராஷ்டிரா : மகாயுதி கூட்டணியினர் கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies