அஜித் பவார் தலைமையிலான, தேசியவாத காங்கிரஸ் பாஜகவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
அஜித் பவார் தலைமையிலான, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் சகோதரர் P.K. நரேஷ்குமார் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நல்லாட்சி மீண்டும் தொடர, வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு அஜித் பவார் அவர்கள் தலைமையிலான, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் சகோதரர் திரு. P.K. நரேஷ்குமார் அவர்கள், தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான நல்லாட்சி மீண்டும் தொடர, வரும் பாராளுமன்றத்… pic.twitter.com/DB76khecBs
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 11, 2024
மத்திய இணையமைச்சர் எல். முருகன், மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.